கண்டி இராச்சியம் எந்த நகரை மையமாகக் கொண்டு உருவானது
ü செங்கடகல
நகரை மையமாகக் கொண்டு பதினைந்தாம் நூற்றாண்டின் பின்னரை காலத்தில் உருவானது
கண்டி
ராஜ்ஜியம் எப்போது ஆங்கிலேயர் வசமானது
ü 1815இல்
கண்டி இராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றினர்
கண்டி
இராஜ்சியத்திற்கு வழங்கப்பட்ட வேறு பெயர்களை தருக?
ü மலைநாடு
மலையக அரசு மலையகத் தலைநகர்
நீண்ட
காலமாக கண்டி இராஜ்ஜியம் சுதந்திரமாக விளங்கியமைக்கு அதன் இயற்கை தோற்றமே காரணமாகும் விளக்குக?
ü போர்த்துக்கேயராலும்
ஒல்லாந்தராலும் கண்டி இராஜ்யத்தை கைப்பற்ற முடியாமல் போனமைக்கு அதன் இயற்கை அரண்களை
காரணங்களாகும் கண்டிக்குகிழக்காகவும் மேற்காகவும் வடக்காகவும் மகாவலிகங்கை ஓடுகின்றது கிழக்கில் உடவத்த மலைத்தொடரும்
தெற்கில் அந்த அந்தானைமலைத்தொடரும் பாதுகாப்பை கொடுக்கின்றன மேலும் பலன உன்னஸ்கிரிய
கண்னொருவ பலக்கடுவ முதலிய கடின பாதைகளுக்கு ஊடாகவே கண்டிக்குள் பிரவேசிக்க முடியும்
கண்டி
இராச்சியம் தோற்றம் பெற்ற விதத்தை விளக்குக
ü கோட்டை
மன்னன் ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் கண்டி இராச்சியமும் யாழ்ப்பாண இராச்சியமும் கோட்டை
மன்னனுக்கு கட்டுப்பட்ட இராச்சியங்களாக இருந்தன
ü ஆறாம்
பராக்கிரமபாகு கண்டி இராச்சியத்தை நிர்வகிப்பதற்காக ஜோதிய இளவரசனை நியமித்தான்
ü ஜோதிய
இளவரசன் கோட்டை மன்னனுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்தினான் ஆறாம் பராக்கிரமபாகு
அம்புலுகல இளவரசன் என்பவனின் தலைமையில் ஒரு படையை அனுப்பி அக் கிளர்ச்சியை அடக்கினான்
ü ஆறாம்
பராக்கிரமபாகுவின் மரணத்தின் பின்பும் கோட்டை இராச்சியம் பலவீனமடைந்தது இதனை பயன்படுத்தி
சேனா சம்பந்த விக்கிரமபாகு என்ற பிரதானி ஒரு கிளர்ச்சி மூலம் கண்டி இராச்சியத்தை கோட்டையின்
ஆதிக்கத்திலிருந்து விடுவித்தான்
கண்டி
இராச்சியத்தின் முதல் மூன்று அரசர்களை தருக
ü சேனா
சம்மந்த விக்ரமபாகு
ü ஜயவீர
பண்டார
ü கரலியத்த
பண்டார
கண்டி
இராச்சியம் சீதாவாக்கை மன்னனிடம் வீழ்ச்சியடைந்த விதத்தை விளக்குக
ü கரலியத்த
பண்டார கண்டியின் அரசன் ஆனதால் சீதாவாக்கை மன்னன் கோபமடைந்தான் இதனால் சீதாவாக்கை இடமிருந்து
கண்டியை பாதுகாக்க கரலியத்த பண்டார போர்த்துக்கேயருடன் நட்புக் கொண்டான்
போர்த்துக்கேயரை
தஞ்சமடைந்த மூவரும் பெற்றுக் கொண்ட கிறிஸ்தவ பெயர்களை தருக
ü யமசிங்கபண்டார - டொன்பிலிப்
ü குசுமாசனதேவி - டோனாகத்தறினா
ü கோணப்பு
பண்டார - டொன் ஜுவான்

கண்டி
அரசர்களுள் முதலாம் விமலதர்மசூரியன் முக்கியமானவன் இதனை மூன்று உதாரணங்கள் மூலம் விளக்குக
ü கண்டியின் சுதந்திரத்தை பாதுகாத்தல்
முதலாம் விமலதர்மசூரியன் சீதாவாக்கை இராச்சியத்தின்
ஆதிக்கத்திலிருந்து கண்டி ராஜ்ஜியத்தை விடுவித்துக் கொண்டான் சீதாவாக்கை மன்னன் கண்டி
மீது படையெடுத்தபோது விமலதர்மசூரியன் அவனை தோற்கடித்தான் போர்த்துக்கேயரை இரு தடவைகள்
தோற்கடித்து கண்டியின் சுதந்திரத்தை பாதுகாத்தான் 1594 இல்
தந்துரையில் நடந்த போரில் ஜெரோலோ பேஸ்த சூஸா தலைமையில் வந்த போர்த்துக்கேய படையை தோற்கடித்தான்
1602 இல் பலனையில் நடந்த போரில் தொன் ஜெரோனி மோத அசவேது தலைமையிலான போர்த்துக்கேய
படையை தோற்கடித்தான்
ü பௌத்த சமயத்திற்கு தொண்டாற்றியமை
முதலாம் விமலதர்மசூரியன் பௌத்த சமயத்திற்கு பல நடவடிக்கைகளை
எடுத்தார் பர்மாவிலிருந்து பிக்குகளை வரவழைத்து உப சமந்தா நிகழ்வை நடத்தினார் லங்காதிலக
விகாரை கடலாதெனிய விகாரை ரிதிவிகாரை முதலியவைகளை புனருத்தானம் செய்தான் பாதுகாப்புக்காக
குருவிட்ட தெல்கமுவ விகாரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்ததாதுவை பெற்று தான் கண்டியில்
கட்டிய தலதா மாளிகையில் வைத்தான்

ü புதிய அரசை பரம்பரையைத் தோற்றுவித்தமை
டோனா கத்தரினாவை
மணந்ததன் மூலம் புதிய அரச பரம்பரையை தோற்று வித்தான் செனரத்
இரண்டாம் இராஜசிங்கன் இரண்டாம் விமலதர்மசூரியன் வீர பராக்கிரம
நரேந்திர சிங்கன் என்னும் மன்னர்கள்பரம்பரையை சார்ந்தவர்களே ஆவர் முதலாம் விமலதர்ம
சூரியன் 1592 தொடக்கம் 1604 வரை கண்டியை
ஆட்சி செய்தான்

இரண்டாம்
இராஜசிங்கனின்
(1635 தொடக்கம் 1587) ஆட்சி கண்டி வரலாற்றில் முக்கியமானது இதனை
மூன்று உதாரணங்கள் மூலம் விளக்குக
போர்த்துக்கேயரை
வெளியேற்றியமை
இரண்டாம் இராஜசிங்கன் போர்த்துக்கேயரை வெளியேற்றுவதற்காக
ஒல்லாந்தர்வுடன் ஒப்பந்தம் செய்தான் 1638 இல் செய்து கொள்ளப்பட்ட இந்த
ஒப்பந்தம் வெஸ்டர்வோல்ட்
ஒப்பந்தம் எனப்படுகின்றது ஒப்பந்தப்படி ஒல்லாந்தர் நடந்துகொள்ளவில்லை இதனால் மன்னன்
ஏமாற்றம் அடைந்தான் ஒரு வெளிநாட்டினரை வெளியேற்ற இன்னொரு வெளிநாட்டினரை வரவழைத்த இவனது
செயலை இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது போல என்று
கூறப்படுகின்றது எவ்வாறாயினும் 1658 இல் போர்த்துக்கேயரது ஆட்சி முடிவுக்கு
வந்தமைக்கு இரண்டாம் இராஜசிங்கனே காரணமானவன்
கண்டியின்
சுதந்திரத்தை பாதுகாத்தமை
இரு தடவைகள் கண்டியை ஆக்கிரமிக்க வந்த படைகளை தோற்கடித்து
கண்டியின் சுதந்திரத்தை இரண்டாம் இராஜசிங்கன் பாதுகாத்தான் இவன் ஆஸ்தான இளவரசனாக இருந்த
போது 1630 இல் இடம்பெற்ற போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பை முறையடித்தான்
பின்பு இவன் மன்னனாக இருக்கும்போது 1638 போர்த்துக்கேயர் கண்டியை மீண்டும்
ஆக்கிரமித்தனர் தியோகு மேலோ கஸ்ரோ என்பவனின் தலைமையில் வந்த படையில்
1000 போர்த்துக்கேய வீரர்கள் இடம் பெற்றனர் அப்படியே கண்ணொறுவை என்ற இடத்தில் திடீரென
தாக்கி போர்த்துக்கேயரை தோல்வியடையச் செய்தார் இவ்வாறு இரு தடவைகள் போர்த்துக்கேயரை
தோல்வியடையச் செய்து கண்டியின் சுதந்திரத்தை இரண்டாம் இராஜசிங்கன் பாதுகாத்தான்
பல
பிரதேசங்களை கண்டியுடன் இணைத்தமை
1638 ஒப்பந்தத்தின்படி மட்டக்களப்பு
திருகோணமலை கோட்டையை ஒல்லாந்தர் மன்னனுக்கு வழங்கினர் ஆனால் காலி கொழும்பு போன்ற ஏனைய
போர்த்துக்கேயரின் கோட்டைகளை வழங்கவில்லை இதனால் இராஜசிங்கமன்னன் ஒல்லாந்தர் மீது கோபம்
அடைந்தான் இதன் காரணமாக 1670 தொடக்கம்
25 வரையிலான காலப்பகுதியில் ஒல்லாந்தரின் பல பிரதேசங்களை கைப்பற்றி கண்டி இராச்சியத்தின்
எல்லைகளை விஸ்தரித்தார் இதனால் போர்த்துக்கேயர் ஆட்சி பரப்பை விட ஒல்லாந்தர் ஆட்சி
பரப்பு குறைந்ததாகவே இருந்தது
இரண்டாம்
விமலதர்ம சூரியனை
(1687-1707)விளக்குக
இரண்டாம் ராஜசிங்கனுக்கு பின்பு அவனது மகன் இரண்டாம்
விமலதர்மசூரியன் ஆட்சிக்கு வந்தான் இவன் அமைதியான ஆட்சியாளன் ஆவான் இவன் கரையோரங்களை
ஆட்சி செய்த ஒல்லாந்தருடன் நட்புறவுடன் நடந்து கொண்டான் பர்மாவிலிருந்து
(மியன்மார்) பிக்குகளை வரவழைத்து உபசம்பதாசடங்கை நடத்தி பௌத்த சமயத்திற்கு தொண்டாற்றினான் தலதா மாளிகையை மும் மாடிகளைக் கொண்டதாக விஸ்தரித்தான்
ஸ்ரீ வீர
பராக்கிரம நரேந்திர சிங்கனை (1707-1739)விளக்குக
இரண்டாம் விமலதர்ம சூரியனுக்கு பின்பு அவனது மகன் வீர
பராக்கிரம நரேந்திர சிங்கன் ஆட்சிக்கு வந்தான்கண்டி அரசர்களுள் பலவீனமான மன்னனாகக் கருதப்படுகிறான் இவனது
காலத்தில் பிரதானிகளின் செல்வாக்கு அதிகரித்தது இவன் தனது தந்தையும் பாட்டனையும் போல நாயக்க வம்ச இளவரசியையே
திருமணம் செய்தான்
இவனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் நாயக்க வம்ச வழக்கப்படி
இவனது மனைவியின் சகோதரனே அடுத்து ஆட்சிக்கு வந்தான் நரேந்திர சிங்கனே கண்டியின் இறுதி
சிங்கள மன்னனாவான்
ஸ்ரீ விஜய
ராஜசிங்க மன்னன்
(1739-1747)
இவனே கண்டியின் முதலாவது நாயக்க மன்னனாவான் இவனது ஆட்சி
காலத்தில் நாயக்க வம்ச உறவினர்களது செல்வாக்கு அதிகரித்தது இதனால் கண்டிப்பிரதானிகள் அதிர்ச்சி அடைந்தனர் இவன் ஒல்லாந்தருக்கு எதிரான கொள்கைகளைக் கடைபிடித்தான் ஸ்ரீ
விஜய ராஜசிங்கன் ஸ்ரீ சரணங்கர தேரரின் பெளத்த சேவைகளுக்கு உதவி புரிந்தான் உபசமந்தா
சடங்கை நடத்த பர்மாவிலிருந்து பிக்குகளை வரவழைக்க எடுத்த இவனது முயற்சி வெற்றி பெறவில்லை
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் 1747 1752 காலத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை
பின்வரும் தலைப்பின் கீழ் விளக்குக
●
பௌத்த சமயத்திற்கு ஆற்றிய தொண்டு
●
ஒல்லாந்தரிடமிருந்து கண்டி ராஜ்யத்தை பாதுகாத்தமை
பௌத்த சமயத்திற்கு ஆற்றிய தொண்டு இதனை இரு உபதலைப்புகளில் கீழ் விளக்கலாம்
ஸ்ரீ
சரணங்கர தேரருக்கு செய்த சேவை
●
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் வெளிவிட்ட ஸ்ரீ சரணங்கர தேரரின்
கல்வி அறிவை அறிந்து அவரையே தனது ஆசிரியர் ஆக்கிக் கொண்டான் அவருக்கு மன்னன் மிக உயர்வான
சங்கராஜ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தான் அவருடைய ஆலோசனையின் படியே மன்னன் நடந்துக்கொண்டதால் இக்காலத்தில் பௌத்தம் மறுமலர்ச்சி அடைந்தது
மன்னன் தேரரின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவினான்

●
சரணங்கர தேரரின் ஆலோசனைப்படி ஒல்லாந்தரிடம் கப்பலை
பெற்று சியம் நாட்டிற்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி உபாலி தேரர் முதலிய பிக்குகளை வரவழைத்தான்
இப் பிக்குகளின் உதவியுடன் 1753 உபசார நிகழ்ச்சி இடம்பெற்றது சீயம் நிக்காய
என்ற சமயப் பிரிவு சீயத்திலிருந்து வந்த பிக்குகளால் இலங்கையில் ஆரம்பமானது
●
மலை நாட்டிலும் கரையோரங்களிலும் அழிவுற்ற பல விகாரைகளை
இவன் புனர் நிர்மாணம் செய்தான் தம்புள்ளை விகாரை அவ்வாறு புனரமைக்கப்பட்ட ஒரு விகாரையாகும்

●
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் இந்துசமயத்தவனாக.
இருந்த போதும் பெரஹர நிகழ்வை சிறப்பாக நடத்த உதவினான் அந்த நிகழ்வில் தேவாலயங்களில்
பெரஹரவையும் இணைத்து கோலாகலமாக நடத்தினான்
ஒல்லாந்தர் இடமிருந்து கண்டியை பாதுகாத்தமை
●
ஒல்லாந்தரால் கண்டிக்கு ஆபத்து வரலாம் என்று எண்ணிய
மன்னன் ஆங்கிலேயருடன் தொடர்பு கொண்டான் ஆங்கிலேயே தூதுவர் ஜோன் பைபஸ்
1762 மன்னனைச் சந்தித்தான் 1765 இல் ஒல்லாந்தர் கண்டி மீது படையெடுத்தனர்
கண்டியை பாதுகாக்க மன்னன் ஆங்கிலேயருடன் சமாதானத்தை நாடி 1765 இல்
ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஆங்கிலேயருடன் செய்துகொண்டான் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மன்னன்
ஆங்கிலேயருக்கு பல சலுகைகளை வழங்கினான் இதன்படி கடற்கரையிலிருந்து நாலு மைல் அகல பிரதேசம் ஒல்லாந்தருக்கு சொந்தமாகும் மலைநாட்டில் வர்த்தகம் செய்ய மன்னன் ஒல்லாந்தருக்கு
அனுமதி வழங்க வேண்டும்
இராஜாதி ராஜசிங்க மன்னனை 1752 - 1798 விளக்குக
●
கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்ன்னின் பின்பு அவனது சகோதரன்
இராஜாதிராஜன் என்ற பெயரில் அரசனானான்
●
இவன் பௌத்த சமயத்தில் பற்றுக் கொண்டவனாக விளங்கினான்
●
இவரது காலத்திலேயே ஆங்கிலேயர்
1795 இல் திருகோணமலையையும் 1796ல் ஏனைய கரையோரப் பிரதேசங்களை
கைப்பற்றினர்
●
இவன் 1798ல் மரணமடைந்தபோது
நேரடி அரசுரிமைக்கு ஒருவரும் இருக்கவில்லை
கண்டியின் இறுதி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜ சிங்கனை ( 1798 1815) பின்வரும் தலைப்புகளின் கீழ் விளக்குக
●
அரசனாகிய விதம்
இராஜாதி ராஜசிங்கனுக்கு
பின்பு கண்டியின் அரசுரிமைக்கு இருவர் போட்டியிட்டனர் கண்ணுசாமி முத்துசாமி ஆகியோரே
அவ்விருவருமாவர் அப்போது பிரதம பிரதானியாக இருந்த பிலிமத்தலாவ கண்ணுசாமியை தனது செல்வாக்கை பயன்படுத்தி
அரசனாக்கினான் கண்ணுசாமி தனக்கு கட்டுப்பட்டு நடப்பான் என்று எதிர்பார்த்தே பிலிமத்தலாவ
அவ்வாறு செயற்பட்டான் கண்ணுசாமி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற பெயருடன்
1798 இல் கண்டி அரசன் ஆனான் இளவரசன் முத்துசாமி பாதுகாப்பு கருதி ஆங்கிலேயரிடம் தஞ்சம்
அடைந்தான்
●
இவன் செய்த சேவைகள்
ஆரம்பத்தில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்
நல்ல பண்புகளை பெற்று பல சேவைகளை செய்தான் இதனால்தான் 1803 இல்
ஆளுநர் நோர்த் படையெடுத்தபோது மக்களும் பிரதானிகளும் பிக்குகளும் மன்னனுக்கு விசுவாசமாக
இருந்தனர் இதனால் ஆளுநர் நோர்த்தின் படையெடுப்பு தோல்வி அடைந்தது மன்னன் செய்த சேவைகளில்
சில பின்வருமாறு
●
மக்களுக்கு சேவை செய்யாத உத்தியோகத்தர்களை தண்டித்தான்
●
அத்தியாவசியமான பொருட்களுக்கு விலை கட்டுப்பாட்டை விதித்தான்
●
இராச்சியத்தில் யாரும் மது அருந்த கூடாது என்றும் உயிர்களைக்
கொல்லக்கூடாது என்று கட்டளையிட்டான்
●
தலதா மாளிகையின் பத்திருப்பை எண்கோண மண்டபம் கட்டினான்
●
தலதா மாளிகைக்கு முன்னால் பாற்கடல் எனப்படும் தடாகத்தை
கண்டி வாவியை நிர்மாணித்தான்
●
பலரும் இவனை வெறுத்த மைக்கான காரணங்கள்
●
யாரும்
மது அருந்தக் கூடாது என்று கட்டளை இட்ட மன்னன் மதுவுக்கு அடிமையாகி தனது நற்பண்புகளை
இழந்தான்
●
அதிக வரிகளை விதித்து தன் எதிர்ப்போரை கடுமையான முறையில்
தண்டித்தான் இதனால் மக்கள் எதிர்த்தனர்
●
நாயக்க உறவினர்களின் விருப்பப்படி ஆட்சி செய்ததனால்
பிரதானிகளின் எதிர்ப்பை சம்பாதித்தான்
●
இவன் பௌத்த சமயத்தை சேராதவனாகவும் சிங்கள மொழியை பேசாதவனாகவும்
இருந்ததால் பிக்குகள் இவனை எதிர்த்தார்கள்
●
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தன்னை அரசனாகிய பிலிமத்தலாவைக்கும்
உதவியாளர் ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்தான்
●
எகலபொல பிரதானி ஆங்கிலேயரை ஆதரித்தமைக்காக அவனது பிள்ளைகளை
கொலை செய்து மனைவியை போகம்பரை வாவியில் (கண்டி வாவியில்)மூழ்கடித்தான்
●
மாம்பிட்டிய திசாவை பரண தல தேரர் முதலிய பலருக்கும்
மரண தண்டனை வழங்கினான்
இவனது ஆட்சி முடிவுக்கு வந்த விதம்
கண்டி இராச்சியத்தில் நிலவிய பொருளாதார முறையை எவ்வாறு வகைப்படுத்தலாம்
●
விவசாயம்
●
வர்த்தகம்
●
கைத்தொழில்
கண்டியின் விவசாயத்தை வகைப்படுத்தி விளக்குக
●
நெல் விவசாயம்
பாரம்பரிய தன்னிறைவு பொருளாதார
முறை கண்டியில் நிலவியது
படிக்கட்டு முறை நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது
●
சேனைச் செய்கை
சேனை செய்கை மேற்கொள்ளப்பட்டது
இங்கு குரக்கன் இருங்கு தினை
முதலிய பயிர்கள் பயிரிடப்பட்டன
●
வீட்டுத்தோட்டம்
·
வீட்டுக்கு அண்மையில் அமைந்திருந்தது
·
இங்கு பலாக்காய் ஈரப்பலா காய் கிழங்கு வகை மரக்கறிகள்
பழங்கள் பாக்கு மிளகு ஏலம் சாதிக்காய் கராம்பு என்பன பயிரிடப்பட்டன
●
கால்நடை வளர்ப்பு
·
கண்டி மக்கள் மாடு ஆடு முதலிய கால்நடைகளை வளர்த்தார்கள்
·
பாலுக்காகவும் விவசாய வேலைகளுக்கும் போக்குவரத்திற்கும்
கால்நடைகள் வளர்க்கப்பட்டன
கண்டியில் இடம்பெற்ற வர்த்தகம் பற்றி விளக்குக
●
உள்நாட்டு வர்த்தகம் வெளிநாட்டு வர்த்தகம் என இரு வகைப்பட்டது
●
கிராமத்திலிருந்த ஒற்றையடி பாதை ஓரங்களில் சிறு கடைகள்
காணப்பட்டன
●
இக்கடைகளில் துணி புகையிலை சுண்ணாம்பு மருந்து பாத்திரங்கள்
உலோக பாத்திரங்கள் முதலியன முக்கியமாக விற்கப்பட்டன
●
உள்நாட்டு வர்த்தகம் பண்டமாற்று முறையிலும் வெளிநாட்டு
வர்த்தகம் பெரும்பாலும் பணம் மூலமாகவும் இடம்பெற்றன
●
வெளிநாட்டு வியாபாரம் அரசனின் ஏகபோக உரிமையாக இருந்தது
●
கண்டி இராச்சியத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட
பொருட்கள்
● கருவா
● பாக்கு
● மிளகு
● யானையும் யானைத் தந்தமும்
● முத்தும் மாணிக்கமும்
● வெற்றிலை
● ஏலமும் கராம்பும்
● சாதிக்காய்
● தேன்மெழுகு

●
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களாவன
● குதிரை
● புடவை
● மட்பாண்டம்
● பீங்கான் பாத்திரங்கள்
● வாசனைப்பொருட்கள்
● கருவாடு
கண்டி இராச்சியத்தில் இடம்பெற்ற கைத்தொழில்களை
விளக்குக
●
குளத்தை அடிப்படையாகக்கொண்ட பரம்பரை தொழில் செய்வோர்
கைத்தொழிலில் ஈடுபட்டனர்
உ+ம் - தச்சர் குயவர்
●
குறிப்பிட்ட கைத்தொழில்களை புரிவோரை கொண்ட கிராமங்கள்
உருவாக்கப்பட்டிருந்தன
உ+ம் -
● இரும்பு உற்பத்தி
கொத்மலை வலப்பனை
● செம்பு உற்பத்தி கிரியுள்ள
● பன் புல்லினால் உருவாகும் பொருள்கள் தும்பறை
● பித்தளை பிலிமத்தலாவை
●
கிராம கொல்லர்கள் மண்வெட்டி கலப்பை கத்தி முதலிய இரும்பு
உபகரணங்களை உற்பத்தி செய்தனர்
●
உற்பத்திப் பொருட்களை மெருகேற்றுவதற்கு அரக்கை உற்பத்தி
செய்தனர்
கண்டி இராச்சிய சமூகத்தின் முக்கிய பண்புகளை தருக
●
சுய தேவையை பூர்த்தி செய்த எளிமையான கிராமிய சமூகம்
நிலவியது
●
குல பிரிவு முக்கியமானதாக நிலவியது ஆடை அணிகலன்கள்
திருமணம் என்பவற்றில் குலம் முக்கியமானதாக பின்பற்றப்பட்டது
●
சமூகத்தில் மதகுருமார் பிரபுக்கள்
(பிரதானிகள்) சாதாரண மக்கள் என மூன்று வகையினர் இருந்தனர்
●
சமூகத்தில் பிக்குகள் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் இவர்கள்
சமய சடங்குகளை மேற்கொள்ளுதல் வைத்தியம் செய்தல் சாஸ்திரம் பார்த்தல் முகூர்த்தத்தை
நிர்ணயித்தல் கல்வி கற்பித்தல் முதலிய கடமைகளில் ஈடுபட்டனர்
●
பிரதானிகள் அரசனுக்கு அடுத்து நிர்வாக அதிகாரங்களை
பெற்றிருந்தனர் இவர்களது ஆடைகளும் ஆபரணங்களும் வீடுகளும் சாதாரண மக்களைவிட உயர்வானதாக
விளங்கின
●
சாதாரண மக்களிடையே விவசாயிகள் தொழிலாளிகள் வர்த்தகர்கள்
என பல பிரிவினர் இருந்தனர்
●
அத்தம் முறை பின்பற்றப்பட்டது
●
அக்கால சமூகம் தந்தைவழிச் சமூகமாக இருந்தது
●
கண்டி சமூகத்தில் தீக திருமணமும் பின்ன திருமண முறையும்
நடைமுறையில் இருந்தன
●
மணமகளை மணமகன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே
வாழ்வது தீக திருமணமாகும்
●
மணமகன் மணமகள் வீட்டிலேயே தங்கி வாழ்வது பின்ன திருமணம் ஆகும்
●
ஒரே பெண்ணை சில சகோதரர்கள் திருமணம் செய்வது பல புருஷ திருமணமாகும்
கண்டி இராஜ்ஜியத்தின் கலை வளர்ச்சி வளர்ச்சியினைப் பின்வரும் தலைப்புகளின்
கீழ் விளக்குக
●
கட்டடக்கலை
●
சமயம் சார்பான கட்டிடங்களை அதிகம் அமைக்கப்பட்டன
உ+ம்
● தலதா மாளிகை எம்பக்க தேவாலயம் லங்காதிலக விகாரை இந்து கோவில்கள்


●
ஆரம்பத்தில் மரத்தூண்கள் விகாரைகள் கட்டப்பட்டன அதிகாரிகள்
அவை டென்பிட்ட விகாரைகள் என்பர் மெத
வலையில் இவ்வாறான
ஒரு விகாரை உள்ளது

●
தலதா மாளிகையை முதலாம் விமலதர்மசூரியன்
கட்டினான் இரண்டாம் விமலதர்மசூரியன் அதனை மூன்று மாடிகளைக்
கொண்டதாக விஸ்தரித்தான்
●
ஓவியக்கலை
●
பௌத்த சமய மறுமலர்ச்சிக்கு ஒரு ஊடகமாக ஓவியக்கலை பயன்படுத்தப்பட்டது
கண்டி இராச்சிய ஓவியக்கலையின் பண்புகள்
●
கற்றோர்
கல்லாதோர் அனைவராலும் இலகுவில் விளங்கக் கூடியதாக அக்கால ஒவியங்கள் விளங்குகின்றன
●
அவைகளை பகுதி பகுதிகளாக பிரித்து நீண்ட கதைகளை படிமுறையாக
முன்வைக்கும் வர்ணம் ஓவியங்கள் வரையப்பட்டன
●
புத்தரது வரலாற்றையும் ஜாதக கதைகளையும் ஓவியங்கள் சித்தரித்தன
●
வெற்றிடங்களை நிரப்ப மலர்களும் இலைகளும் வரையப்பட்டன
●
ஒவ்வொரு ஓவிய சட்டகத்தின் கீழும் கதை அம்சங்கள் சுருக்கமாக
பெயரிடப்பட்டுள்ளன
●
மனிதர்கள் பிராணிகள் தாவரங்கள் ஆகிய உருவங்களில் சரியான
அளவீடு பேணப்படாமை
●
தாவரங்கள் கணியங்கள் இலிருந்து நிறங்கள் தயாரிக்கப்பட்டன
சிவப்பு நிறம் அதிகமாகவும் மஞ்சள் நிறமும் பயன்படுத்தப்பட்டது
●
வெஸ்ஸந்தர தேலபத்த தஹம்பொத ஆகிய ஜாதக நூல்களில் இருந்து
பெறப்பட்ட ஜாதக கதைகளே பெரும்பாலும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன
●
தம்புள்ளை தெகல்தொருவ தலதாமாளிகை முல்கிரிகல ஆகிய இடங்களில்
இன்றும் கண்டி இராச்சியத்துக்குறிய ஓவியங்களைக் காணலாம்




0 Comments